Saturday, March 9, 2019

ஒரு வாகனத்தில் ஏன் பிரேக் தேவை? அதாவது நிறுத்த கட்டுப்பட்டு கருவி ஏன் தேவை? வாகனத்தை நிறுத்துவதற்கு என்றா நினைக்கிறீர் ? உண்மையில் உங்களால் வாகனத்தை பயமின்றி ஓட்டமுடிகிறது மற்றும் விரைவிவிரைவாகவும் ஓட்டிச்சென்று விரும்பிய எல்லையை அடையமுடிகிறது என்றால் அதற்க்கு காரணம் எது? அந்த வண்டியை ஒட்ட கூடிய தைரியத்தை தந்தது எது ? அந்த வண்டியில் பிரேக் இருக்கும் தைரியமும் எந்த நேரம் தேவைப்பட்டாலும் வாகனத்தின் வேகத்தை கூடவோ நிறுத்தவோ முடியும் என்ற நம்பிக்கை தானே? எத்தகைய  கட்டுப்பாட்டு கருவிகள் இல்லை என்றால் நம் பயணத்தை நினைத்து பாருங்கள் . அது துவங்கிய இருக்காது.

ஆம். நம் வாழ்க்கையில் பயணம் மற்றும் நம் வல்வைசார்ந்த அணைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நாம் வரையறுத்து வைத்துள்ள கட்டுப்பாடுகளும் க்கோட்பாடுகளும் என்றால் அது மிகையல்ல. இவை நாம் அதிவேகம் எடுத்து வாழ்கை பயணத்தில் தடம் புரண்டு விடாமல் காப்பாத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகளை ஒவ்வுறு மனிதனும், குடும்பமும் , மாநிலமும் நாடும் பின்பற்றினால் ஒரு அழகான மகிழ்ச்சியான உலகை நம்மால் உருவாக்க முடியும்.

முதலில் சுய மனித பழக்க வழக்கங்களை பார்ப்போம் . வாழ்க்கையின் ஆதாரம் உணவு.அதில் ஏன் கட்டுப்பாடு? தினமும் கட்டு கட்டலாம் எங்கீறீர்களா? சிந்தியுங்கள்.

அமெரிக்கா பெடரல் சுகாதாரத்தூரை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி 86% நாள்பட்ட தீராத நோயாளிகள் உள்ளனர். அந்த நோயிலிருந்து விடுபட அல்லது நோயை குணப்படுத்த செலவிடும் பணத்தை குறைக்க ஒரு எளிய தீர்வு உள்ளது. அது உணவு கட்டுப்பாடு . நம்மை ஆரோக்ஹ்யமாக வைத்துக்கொள்ள ஒரு தடுப்பு மருந்து -உணவு . நல்ல ஆரோக்ஹ்யமான , சீரான அளவான உணவு நம்மை பேராபதிலிருந்து காப்பாற்றுகிறது .

ஆடை . இதில் கட்டுப்பாடு தேவையா? பள்ளிகளில் அவசியம் என்று கருதப்படுகிறது .எனவே  சீருடைகள் . நிறுவனங்களில் அவசியம் என்று கருதப்படுகிறது. ஆடை குறியீயீடுகள் ஆயுதப்படைகளில் அவசியம் என்று கருதப்படுகிறது. முக்கிய நிகழ்வுகளிலும் , திருமணங்களிலும் , மத சடங்குகளிலும் அவசியம் என்று கருதப்படுகிறது. அசாதாரண உடை அலங்காரம் அந்த நிகழ்ச்சியின் உண்மையான கவனத்திலிருந்து திசை திருப்புகிறது. பள்ளிகளில் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமணம் என்பது ஒரு உன்னதமான புனிதமான நிகழ்வு. அதில் நம் உடை அலங்காரம் மரியாதை செலுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். பள்ளியில் கட்டுப்பாடு இல்லாமல் உடை அணியலாம் என்று சொன்னால் எத்தனை பெரு தினமும் விதவிதமான உடை மற்றும் சிகை அலங்காரம் செய்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டுவர் . நினைத்தாலே தலை சுற்றுகிறது.

சரி இதையெல்லாம் விடுங்கள். சுய மனித பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு வேண்டாமா. கட்டுப்பாடு இல்லா பழக்கவழக்கங்கள் நம் வாழ்வை வீழ்த்ததா? மது மாது சிகரெட்டு போன்ற தீய பழக்கங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை குலைத்திருக்கிறது.

சோம்பேறித்தனம், பொய் பேராசை பெருங்கோவம் போன்ற குணங்கள் யாவும் கட்டுப்படை கடக்கும் போது வாழ்க்கையை கெடுக்கும் பேரிடராக மாறுகிறது . இதிலிருந்து மீள நம்மக்கு தேவை சுயகட்டுப்பாடு